“ லாஃப்ஸ் ஹோல்டிங்ஸ் இலங்கையில் பல்வேறு வியாபாரத் துறைகளில் கால்பதித்துள்ள மிகப் பாரிய கூட்டு நிறுவனங்களுள் ஒன்றாகவும், நம்பிக்கையை வென்றெடுத்துள்ள ஒரு வர்த்தகநாமமாகவும் திகழ்ந்து வருகின்றது. 1995 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட லாஃப்ஸ், இன்று 20 தொழிற்துறைகள் மத்தியில் தனது தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், மின்வலு மற்றும் எரிசக்தி, சில்லறை வியாபாரம்,கைத்தொழில்,சேவைகள்,பொழுதுபோக்கு, பண்ட இடப்பெயர்வு மேலாண்மை மற்றும் அசைவற்ற ஆதன இருப்பு ஆகிய தொழிற்துறைகளில் இலங்கையிலும், அதற்கு வெளியிலும் உறுதியான காற்தடத்தைக் கொண்டுள்ளது. ”
லாஃப்ஸ் கேஸ் பி.எல்.சி எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான நிலையை வலுப்படுத்த மூலோபாய மறுசீரமைப்பை நிறைவு செய்கிறது.
முதல் கோகாத் வாழ்க்கை முறை கடை கே மண்டலம் ஜா-எலாவில் திறக்கப்படுகிறது.
எரிசக்தி கடற்படையை உருவாக்குதல்: லாஃப்ஸ் மரைடைம் எல்பிஜி கப்பல் கடற்படையை மற்றொரு கூடுதலாக விரிவுபடுத்துகிறது - எரிவாயு தைரியம்.
ஆற்றல் எதிர்காலம்: லாஃப்ஸ் பவர் இலங்கையின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை கமிஷன் செய்கிறது.
CA வருடாந்திர அறிக்கை விருதுகளில் LAUGFS கேஸ் பி.எல்.சி மீண்டும் தங்க விருதை வென்றது.
எரிசக்தி கூட்டமைப்பு: LAUGFS இன் எரிசக்தி வர்த்தக பிரிவான SLOGAL Energy DMCC ஐ அமைப்பதன் மூலம் துபாய் நடவடிக்கைகள் தொடங்குகின்றன.
வளர்ந்து வரும் வாய்ப்புகள்: Lfinity (Pvt) Ltd. clickNshop.lk மற்றும் GroceryPal.lk ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆன்லைன் சில்லறை விற்பனையில் நுழைகிறது.
எல்லையற்ற சொகுசு: ஆடம்பர ரிசார்ட்ஸின் அனந்தயா சங்கிலியில் புதியது பாசிக்குடாவில் திறக்கப்படுகிறது.
ஒரு சிறந்த லீக்: தலைவர் வெகாபிட்டியாவுக்கு ஆண்டின் அதா டெரானா இலங்கை தொழில்முனைவோர் விருது வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் CA வருடாந்திர அறிக்கை விருதுகள், தேசிய வணிக சிறப்பு விருதுகள் மற்றும் SLIM நாஸ்கோ ஆகியவற்றில் தங்கம் வென்றதுடன் LAUGFS மற்றொரு ஆண்டு சிறந்த விருதுகளை கொண்டாடுகிறது. ஆடம்பர ரிசார்ட்ஸின் அனந்தயா சங்கிலிக்கு உலக சொகுசு ஹோட்டல் விருதுகளில் பிராந்திய மற்றும் நாடு விருதுகள் வழங்கப்படுகின்றன.
லாஃப்ஸ் மெரிடைம் தனது திரவ பெட்ரோலிய வாயு காவிக் கப்பல் தொகுதியைப் பலப்படுத்தும் வகையில் தனது இரண்டாவது திரவ பெட்ரோலிய வாயு காவிக் கப்பலான Gas Success இனை கொள்முதல் செய்தது.
பங்களாதேஷிலுள்ள மிகப் பாரிய திரவ பெட்ரோலிய வாயு துறை தொழிற்பாட்டாளர்களுள் ஒன்றான Petredec Elpiji Ltd நிறுவனத்தை கொள்முதல் செய்ததன் மூலமாக பல்தேசிய வர்த்தகத்தில் கால்பதித்த இலங்கையின் முதலாவது எரிசக்தி வர்த்தகநாமமாக லாஃப்ஸ் மாறியது.
SLIM NASCO விருதுகள் தேசிய விற்பனை மாநாடு) மற்றும் SLCBCC வியாபார நட்சத்திர விருதுகள் நிகழ்வில் லாஃப்ஸ் கேஸ் தங்க விருதுகளை வென்றுள்ளது.
சிலாபத்தில் அனந்தயா ரெசோர்ட்ஸ் அன்ட் ஸ்பா தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்ததன் மூலமாக லாஃப்ஸ் பொழுதுபோக்குத் துறையில் கால்பதித்திருந்தது.
MT Gas Challenger என்ற திரவ பெட்ரோலிய வாயு காவிக் கப்பலை லாஃப்ஸ் மெரிடைம் கொள்முதல் செய்தது.
லாஃப்ஸ் பவர் தனது முதலாவது நீர் மின்வலு நிலையத்தை பலாங்கொடையில் ஆரம்பித்தது.
மாயா அவெனியூவில் வர்த்தகப் பயன்பாட்டிற்கான எமது முதலாவது கட்டடத்தொகுதியின் நிர்மாணத்தின் மூலம் அசைவற்ற ஆதன இருப்பு தொழிற்துறைக்கு எமது தொழிற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டன.
பட்டயக் கணக்காளர்கள் நிலையத்தின் ஆண்டறிக்கை விருதுகள் நிகழ்வு மற்றும் தேசிய வியாபார மேன்மை விருதுகள் நிகழ்வில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் லாஃப்ஸ் கேஸ் பீஎல்சி தங்க விருதுகளைப் பெற்றுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் நிலைபேற்றியலுக்கான விருதுகள் நிகழ்வில் மிகச் சிறந்த வர்த்தக நிறுவனம் என்ற இனங்காணல் அங்கீகாரத்தையும் அது சம்பாதித்துள்ளது. Vision Awards 2014 விருதுகள் நிகழ்வில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மிகவும் ஈடுபாட்டுடனான ஆண்டறிக்கைக்காகவும், ஆண்டறிக்கையின் மேம்பாட்டு வளர்ச்சியைப் பொறுத்த வரையில் தொழிற்துறையில் மேன்மைக்காகவும் பிளாட்டினம் விருதுகளைப் பெற்றுள்ளது.
தேசிய வியாபார மேன்மை விருதுகள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் ஆண்டறிக்கை விருதுகள் நிகழ்வுகளில் லாஃப்ஸ் கேஸ் பீஎல்சி தங்க விருதுகளைப் பெற்றுள்ளது.
தேசிய அளவிலான மிகச் சிறந்த தரத்திலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் நிகழ்வில் தொழிற்துறை மேன்மையில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களுள் ஒன்றாக லாஃப்ஸ் கேஸ் இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், வர்த்தக தகவல் தொழில்நுட்ப பிரிவு தங்க விருதையும் பெற்றுள்ளது.
ஆசிய பசுபிக் தொழில்முயற்சியாளர்கள் விருதுகள் நிகழ்வில் ஆண்டின் மிகச் சிறந்த தொழில் முயற்சியாளர் என்ற விருதை திரு.வெஹபிட்டிய அவர்கள் பெற்றுக்கொண்டார்.
ARC விருதுகள் நிகழ்வில் ஆண்டின் மிகச் சிறந்த சில்லறை விற்பனையாளர் (சுப்பர்மார்க்கட்டுக்கள்) என்ற இனங்காணல் அங்கீகாரத்தை லாஃப்ஸ் சுப்பர்மார்க்கட் சங்கிலி பெற்றுக்கொண்டதுடன், ஆசிய தலைமைத்துவ விருதிகள் நிகழ்வில் ஆண்டின் மிகச் சிறந்த புத்தாக்க சில்லறை விற்பனை எண்ணக்கருவிற்கான விருதையும் பெற்றுள்ளது.
மதிப்புமிக்க தேசிய தர விருதை லாஃப்ஸ் கேஸ் பெற்றுக்கொண்டது.
தனது ஆரம்ப பொது வழங்கல் முயற்சியில் அமோக வரவேற்பைப் பெற்று லாஃப்ஸ் கேஸ் பீஎல்சி பொது உடமை நிறுவனமாக மாறியது.
நுகர்வோர் உணவு சில்லறை விற்பனைத் துறையில் சண்அப் வர்த்தகநாம தேயிலை சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இலங்கையிலுள்ள இளம் தொழில்முயற்சியாளர்கள் சம்மேளனத்தினால் மிகச் சிறந்த பெறுப்பேற்றுத்திறனுக்காக மேன்மை விருதை திரு.வெஹபிட்டிய அவர்கள் பெற்றுக்கொண்டதுடன், நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதில் மேன்மைக்காக இனங்காணல் அங்கீகாரத்தையும் சம்பாதித்துள்ளார்.
தேசிய வியாபார மேன்மை விருதுகள் நிகழ்வில் பல்துறை குழும நிறுவனங்கள் பிரிவில் வெற்றியாளராக லாஃப்ஸ் தெரிவு செய்யப்பட்டதுடன், LMD சஞ்சிகையால் தேசத்தின் மீது அக்கறை கொண்ட, மிகவும் நன்மதிப்புடைய வியாபார நிறுவனமாகவும் இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.
வர்த்தக மற்றும் ஊடக உலகு “50” விருதுகள் நிகழ்வில் தேசிய வியாபார தொழிற்துறைகளுக்கான உற்பத்தித்திறன் மேன்மை விருதை திரு.வெஹபிட்டிய அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இலங்கையில் முதலாவது வாகன புகை கசிவு சோதனை நிலையத்தை லாஃப்ஸ் இகோ ஶ்ரீ கம்பஹாவில் ஆரம்பித்தது.
லாஃப்ஸ் கோர்ப்பரேஷன் (றபர்) லிமிட்டெட், ஹொறணையிலுள்ள தனது தொழிற்சாலையில் தொழிற்துறை பாவனைக்கான கன டயர்களின் உற்பத்தியை ஆரம்பித்தது.
இலங்கையில் முதலாவது உள்நாட்டு மசகு எண்ணெய் வர்த்தகநாமமான லாஃப்ஸ் ஓயிலை லாஃப்ஸ் லுப்ரிகன்ட்ஸ் அறிமுகப்படுத்தியது.
லாஃப்ஸ் கோர்ப்பரேஷன் (றபர்), இகோ ஶ்ரீ, மற்றும் சோல்ற் அன்ட் கெமிக்கல்ஸ் வியாபாரங்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.
தொழில்முயற்சியில் மேன்மைக்காக பணிப்பாளர் சபைத் தலைவரான வெஹபிட்டியவிற்கு ஆசிய வலய தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.
லாஃப்ஸ் பொழுதுபோக்கு மற்றும் அசைவற்ற ஆதன இருப்பு தொழிற்துறை வியாபாரங்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு சபை அந்தஸ்து கிடைக்கப் பெற்றது.
JADE உணவக சங்கிலியின் முதலாவது உணவகம் திறந்து வைக்கப்பட்டது.
FCCISL இன் தேசிய பிளாட்டினம் விருது நிகழ்வில் ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் என்ற விருதை பணிப்பாளர் சபைத் தலைவரான வெஹபிட்டிய பெற்றுக்கொண்டார்.
FCCISL இன் தங்க விருது நிகழ்வில் ஆண்டின் மிகச் சிறந்த இலங்கை தொழில்முயற்சியாளர் என்ற விருதை லாஃப்ஸின் பணிப்பாளர் சபைத் தலைவரான திரு. டபிள்யூ.கே.எச். வெஹபிட்டிய பெற்றுக்கொண்டார்.
லாஃப்ஸ் பெட்ரோலியத்துடன் பெட்ரோலிய சில்லறை வியாபாரத் துறையில் கால்பதித்தது.
முதலாவது திரவ பெட்ரோலிய வாயு காவிக் கப்பலான LAUGFS Wega இலங்கை கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட செயற்திட்டமாக லாஃப்ஸ் கேஸ் உள்நாட்டு திரவ பெட்ரோலிய வாயு தொழிற்துறையில் கால்பதித்தது.
சர்வதேச தர அங்கீகாரத்துடன் உயர் கொள்ளளவு கொண்ட திரவ பெட்ரோலிய வாயு களஞ்சிய தாங்கிகளை உற்பத்தி செய்யும் தொழிற்பாடுகளை லாஃப்ஸ் இன்ஜினியரிங் ஆரம்பித்தது.
இலங்கையில் முதலாவது 24 மணி நேர சுப்பர் மார்க்கட்டை ஹவ்லொக் டவுனில் திறந்து வைத்தது.
காஸ் ஓட்டோ லங்கா முதலாவது வாகன எரிவாயு மாற்றீட்டு பட்டறை மற்றும் நிரப்பு நிலையத்தை வத்தளையில் ஆரம்பித்தது