எமது நிலைபேற்றியல் கொள்கையானது எமது விழுமிய கட்டமைப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.நேர்மை என்பது லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான விழுமியமாக அமைந்துள்ளதுடன், எமது வியாபாரத் தொழிற்பாடுகளில் பிரதான பங்கு வகிக்கின்றது. நிலைபேற்றியல் அம்சங்கள் மீதான எமது அணுகுமுறையை இனங்காண்பதற்கு, எமது வியாபார தீர்மானங்கள் மற்றும் தொழிற்பாடுகளுக்கு வழிகாட்டும் உமது உறுதியான விழுமிய கட்டமைப்பில் நாம் பிரதானமாகத் தங்கியுள்ளோம். வாடிக்கையாளரை மையப்படுத்திய அணுகுமுறை, புத்தாக்கம், ஓன்றுபட்டு உழைத்தல்,நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடைய வியாபார நிறுவனமாகச் செயற்படுதல் ஆகியன லாஃப்ஸ் நிறுவனத்தின் கலாச்சாரத்தில் ஒன்றியுள்ள விழுமியங்களாக உள்ளன.
எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்தவற்றை விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் சிறப்பை நாம் முன்னெடுத்து வருகின்றோம்..
எமது போட்டியாளர்களை விட நாம் முன்னிலையில் திகழ முயற்சிப்பதுடன், புத்தாக்கத்தின் மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தீர்வுகளை வழங்கி வருகின்றோம்.
நாம் நேர்மையை மதிப்பதுடன், எமது வியாபார கொடுக்கல் வாங்கல்களில் தொழில்தர்மத்தைப் பேணுகின்றோம்.நேர்மை என்பதற்கு எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களும் கிடையாது.
நாம் ஓன்றுபட்டு உழைப்பதுடன், ஒன்றுபட்ட உழைப்பின் வெற்றியை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றோம்.
எமது வியாபாரத் தொழிற்பாடுகள் அனைத்தும் நிலைபேற்றியல் கொண்டவையாக இருப்பதை நாம் உறுதி செய்வதுடன், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், இடைத்தரகர்கள், பங்குதாரர்கள், சமூகம் மற்றும் சூழல் என குழுமத்துடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் எவ்விதமான கேடும் விளைவிக்காக வகையில் தொழிற்பட்டு வருகின்றோம்.